நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்கு தப்பிய தம்பதி தாயகம் திரும்பிய நிலையில் சிக்கியது!

Editor 1

நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

3 வருடங்களுக்கு முன்னர் 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குறித்த தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share This Article