மட்டக்களப்பு – வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட குறித்த சடலம் வவுணதீவு – காந்திநகர் – சின்னசிப்பிமடு பகுதியைச் சேர்ந்த 51வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.