2024 இல் மின் வேலிகளால் 50 யானைகள் மரணம்!

Editor 1

சட்டவிரோத மின்சார வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டில், சட்டவிரோத மின் வேலிகள் மற்றும் கம்பி இணைப்புகளின் காரணமாக 50 யானைகள் வரை உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புராதனக் காலம் முதல் சமய ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகின்ற யானைகள் சுற்றுலாப் பயணிகளால் அதிகளவில் விரும்பப்படுகின்றன.

எனவே, பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்கின்ற யானைகளைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு கோரியுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு சட்டவிரோதமாக அமைப்படும் மின்சார வேலிகள் மற்றும் மின் இணைப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க 0112 118 767 அல்லது 1987 என்ற துரித இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This Article