அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான யோசனை இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி தொகை சுங்கத்திற்கு வந்தாலும் அமைச்சரவையின் தீர்மானம் வரும் வரை அவற்றை விடுவிக்கக் கூடிய இயலுமை இல்லை என சுங்கத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் டன் அரிசி கையிருப்பு தொகை நாளை இலங்கையை வந்தடையவுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் அன்றைய தினத்திற்குள் வெளியிடப்படாவிட்டால், அரிசி இருப்புக்களை வெளியிட முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று கூடவுள்ள அமைச்சரவையில், வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.