‘சமஷ்டி தீர்வைக் கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது’ என்று ஜனசத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பி வருகின்றார். அவர் கொழும்பில்தான் வாழ்கின்றார்.
கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்தவேண்டும்? அதுமட்டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.
சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக
கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜேந்திரகுமார் இனவாதத்தை துண்டினால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டி வருமோ தெரியவில்லை.
இனவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது. டயஸ்போராக்களின் கோரிக்கைக் கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார்.
டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் – என்றார்.