யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11 பேருமாக மொத்தமாக 39 பேர் எலிக் காய்ச்சலுக்காகத் தற்சமயம் சிகிச்சை பெற்றுவருவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கரவெட்டி – துன்னாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.