வவுனியா, சேமமடு குளத்தின் வான் பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று (15.12) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்து வருகின்றார்.
இந்தநிலையில், நேற்றையதினம் (14.12) மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகிய நிலையில் அவரை காணாத நண்பர்கள் தேடியுள்ளனர்.
அவரது சடலம் இன்று (15.12) காலை குறித்த ஆற்றுப் பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டது.
சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.