வடக்கில் மர்மக் காய்ச்சல்; உயிரிழப்பு எண்ணிக்கை 08 ஆக அதிகரித்தது!

வடக்கில் மர்மக் காய்ச்சல்; உயிரிழப்பு எண்ணிக்கை 08 ஆக அதிகரித்தது!

editor 2

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர காய்ச்சலுக்கு உட்பட்டிருந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக அவருக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இளைஞருக்கான நோய் அறிகுறிகள் எலிக்காய்ச்சலுக்கு உரியவை என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய காலமாக மர்மக் காய்ச்சலால் வடக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article