ஏப்ரலில் உள்ளூராட்சி, செப்ரெம்பரில் மாகாணசபை தேர்தல்கள்?

ஏப்ரலில் உள்ளூராட்சி, செப்ரெம்பரில் மாகாணசபை தேர்தல்கள்?

editor 2

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் செப்ரெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ;த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சிச்சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்பு மனுக்களை கோரும் வகையில் உளளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்தவும், 7 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி வரும் மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது – என்றுள்ளது.

Share This Article