இந்திய நிதியுதவியுடன் சம்பூரில் 120 மெகாவோட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் இந்திய மத்திய மின்சார அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இருக்கும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த விஜயம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.