இறக்குமதியாகும் வாகனங்களின் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இணையத்தளம்!

Editor 1

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article