அசாத் சாலி கைது சட்டவிரோதமானது; உயர் நீதிமன்றம்!

Editor 1

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 2021 இல் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இதற்காக அவருக்கு 75,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனப் பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Share This Article