வடக்கில் மரணித்தோரில் சிலருக்கு எலிக்காய்ச்சல்; உறுதியானது!

Editor 1

வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர்களில் சிலரது இரத்த மாதிரி பரிசோதனையில் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று . தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவு அறிவித்துள்ளது.

வட மாகாணத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 07 பேரின் இரத்த மாதிரி பரிசோதனையில் அவர்களில் சிலர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீண்ட நாள் காய்ச்கல் , கண் சிவத்தல் , உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.

Share This Article