விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

Editor 1

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திச்சென்ற ஜீப்வண்டி செங்கலடி கரடியனாறு பிரதான வீதியில் காயங்குடா பகுதியில் வைத்து நேற்று இரவு பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் காயமடைந்த பாதசாரியும் குறித்த பொலிஸ் அதிகாரியும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்தநிலையில், காயமடைந்த பாதசாரி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மான்ன இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு பாசிக்குடாவில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்றிரவு விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட கரடியனாறு பொறுப்பதிகாரி மீண்டும் பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிய போது வீதியில் நடந்துச்சென்ற ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article