வாகன இறக்குமதி தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Editor 1

வாகன இறக்குமதிக்கு அனுமதி தருவதாக அரசாங்கம் அறிவித்தும், அது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். 

அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் பேருந்து மற்றும் பாரவூர்தி என்பவற்றுக்கான அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மக்களும் வாகன இறக்குமதியாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

இவ்வாறான பின்னணியில் பல வாகன இறக்குமதியாளர்கள் அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்வது தொடர்பில், அவர்களது பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். 

இதன்காரணமாக வாகன இறக்குமதி, பேசுபொருளாக மாறியுள்ளது. 

இந்தநிலையில், வாகன இறக்குமதிக்கான உரிய தினத்தை அரசாங்கம் இதுவரையிலும் அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகோ தெரிவித்துள்ளார்.

Share This Article