யாழில் பாரிய திருட்டுக்களில் ஈடுபட்டுவந்த நபர் சிக்கினார்!

Editor 1

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து அதிகமான நகைகள், ஆவணங்கள், திருட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பன பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்துச் சென்று, நகைகளைத் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Article