உயர்தரப்பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்!

Editor 1

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் புதன்கிழமை (4) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட நேர அட்டவணைக்கமைய இன்றைய தினத்துக்கான பரீட்சை இடம்பெறவுள்ளது.

டிசம்பர் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணை எதிர்வரும் 7ஆம் திகதி வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை இரசாயனவியல் பகுதி ஒன்று, தொழிநுட்பவியல் பகுதி ஒன்று, நடனம் மற்றும் நாடகம் (மும்மொழிகளிலும்) பகுதி ஒன்று ஆகிய பரீட்சைகளும் மதியம் அரசறிவியல் பகுதி ஒன்றும் இடம்பெறவுள்ளன.

நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சைகளை டிசம்பர் 21ஆம் திகதி நடத்துவதற்கும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சைகளை டிசம்பர் 23ஆம் திகதி நடத்துவதற்கும், நவம்பர் 29ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சைகளை டிசம்பர் 27ஆம் திகதி நடத்துவதற்கும், நவம்பர் 30ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சைகளை டிசம்பர் 28ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை டிசம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த பரீட்சைகளை, டிசம்பர் 30ஆம் திகதி நடத்துவதற்கும், டிசம்பர் 3ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெறவிருந்த பரீட்சைகளை, டிசம்பர் 31ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட முழுமையான நேர அட்டவணையை சகல மாணவர்களுக்கும் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article