வீட்டு கிணற்றில் நீராடிக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் (வயது 52 ) என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து நீராடிக்கொண்டு இருந்த வேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்தார்.
அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெய பாலசிங்கம் மேற்கொண்டார். உடற் கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.