ஐ.தே.க – ஐ.ம.சக்தியை ஒன்றிணைக்க முயற்சி!

ஐ.தே.க - ஐ.ம.சக்தியை ஒன்றிணைக்க முயற்சி!

Editor 1

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் அரசியல் களத்தில் விரைவில்
மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.

ஐ.தே.கவில் இரு இணைத் தலைமைப் பதவிகளை உருவாக்கி ஒன்றை சஜித்துக்கும், மற்றொன்றை ருவான் விஜேவர்தனவுக்கும் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், கட்சியின் அதிஉச்ச தலைவர் பதவியை உருவாக்கி, அதனை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால் இணைவு சாத்தியப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால் ஐ.தே.கவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்தால் மாத்திரமே அடுத்த
ஐந்தாண்டுகளில் ஆட்சியை பிடிப்பது பற்றி சிந்திக்கலாம், அவ்வாறு இல்லையேல் நாமல் ராஜபக்ஷவுக்கான வாய்ப்பே அதிகரிக்கும் என இரு கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும்
என சஜித் தரப்பில் வலியுறுத்திவரும் அரசியல் பிரமுகர்கள் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article