புதிய பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கமைய,
பீ.பீ.சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ – அமைச்சரவையின் செயலாளர்
சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு
கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
ஜே.எம்.திலகா ஜயசுந்தர – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு
எச்.எஸ்.எஸ்.துய்யகொன்த – பாதுகாப்பு அமைச்சு
டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு
யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு
பேராசிரியர்.கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு
எஸ்.ஆலோக பண்டார – பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
எஸ்.எம்.பியதிஸ்ஸ – தொழில் அமைச்சு
ஏ.விமலேந்திரராஜா – வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
டீ.பி.விக்ரமசிங்ககே – விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
எம்.ஜீ.எஸ்.என்.களுவெவ – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
ஏ.எச்.எம்.யூ அருண பண்டார இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அருணி ரணராஜா – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.