இன்று நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அரச, தனியார் நிறுவனங்கள் தமது சகல ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை வழங்காத நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க விடுமுறை வழங்குவதில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்குவதில்லை என்ற முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன.
அவ்வாறு எந்த நிறுவனமாவது, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன்
பிரகாரம், வாக்களிக்க செல்லவிருக்கும் தூரத்துக்கு அமைய தமது ஊழியருக்கு
விடுமுறை வழங்காவிட்டால், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு
மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது ஒரு இலட்சம் ரூபாய்
தண்டம் விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இரண்டும் விதிக்கப்படலாம்.
அதனால் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேர்தல் பிரசார பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பல்வேறு
வழிகளில் கட்டணம் செலுத்தப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் பிரசுமாகி வருகின்றன. நேற்று முன்தினம் வரை இது தொடர்பாக 580 விளம்பரங்கள் பிரசுர
மாகி இருப்பது தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாங்கள் முறையிட்டிருந்தோம்.
தற்போது அது 80 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இது தவிர தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தலங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பாகவும் நாங்கள் அதானம் செலுத்தி
வருகிறோம் – என்றும் கூறினார்.