பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை!

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை!

Editor 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article