‘என்னை வேட்பாளராக்கியது எனக்குத் தெரியாது’ – யாழில் பெண் முறைப்பாடு!

'என்னை வேட்பாளராக்கியது எனக்குத் தெரியாது' - யாழில் பெண் முறைப்பாடு!

Editor 1

நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேச்சை குழு ஒன்று தனக்கு தெரியாமலேயே தனது பெயரை
வேட்பாளராகக் குறிப்பிட்டுள்ளது என்று கூறி பெண் ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் உதவி தேர்தல் ஆணையாளரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பெண் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

தனது விவரங்களை தனக்கு தெரியாமலேயே பெற்று வேட்பாளர் பட்டியலில் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் தனக்கு எந்த விடயமும் தெரிய வராத நிலையில், ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டபோதே வேட்பாளர் பட்டியலில்
தனது பெயர் இருந்தமை தெரிய வந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் உறுதிப்படுத்திய பின்னரே இந்த முறைப் பாட்டை செய்துள்ளதாகவும் முறைப்
பாடளித்த பெண் தெரிவித்தார்.

Share This Article