இந்த ஆண்டில் ஒக்ரோபர் 25 ஆம் திகதி வரை ஆயிரத்து 818 வீதி விபத்துகள் இடம்பெற்றன. இவற்றில் ஆயிரத்து 898 பேர் உயிரிழந்தனர் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.
மேலும், வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 676 பேர் பாதசாரிகளாவர். 1,818 விபத்துகளில் 730 மோட்டார் சைக்கிள்களும் 209 ஓட்டோக்களும், 258 லொறிகளும் 146 பேருந்துகளும் 118 வான்களும் சம்பந்தப்பட்டுள்ளன.
மேலும், 42 வாகனங்களின் சாரதிகள் விபத்துகளை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். எனவே, வீதிகளில் பயணிக்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.