பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் யாழ்ப்பாணம்
மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம்
ஆண்டகையை சந்தித்தனர்.
யாழ் மறைவாட்ட ஆயர் இல்லத்தில் நேற்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியில் போட்டியிடும் பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ் மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் யசோதினி கருணாநிதி அகியோர் கலந்து கொண்டனர்.