பாழடைந்த கிணற்றில் 3 வயது சிறுவன் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், பிரதீஸ்வரன் ரோஹித் என்ற சிறுவனே உயிரிழந்தார்.
சிறுவன் தனது வீட்டின் வளவில் கைவிடப்பட்ட, ஆனால், தகரத்தால் மூடப்பட்ட கிணற்றின் அருகே நின்று விளையாடியுள்ளார்.
இந்த நிலையிலேயே கிணற்றில் சிறுவன் தவறி வீழ்ந்துள்ளார். மகனை காணவில்லை என்று பெற்றோர் தேடிய போதே கிணற்றிலிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம். எஸ்.எம். நசீர் சம்பவ இடத்துக்குச்
சென்று, முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.
ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.