அறுகம் குடாவில் தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் தீவிரவாதமில்லை. இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயல் என்று அரசாங்கம் அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், அறுகம் குடா தாக்குதல் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டமை உட்பட பல விடயங்கள் குறித்து அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.
விசாரணைகளின் போது தெரியவந்த விடயங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். தனிநபர் குழுவொன்றே இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டது. இதன் பின்னணியில் எந்தவித தீவிரவாதமும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், அமெரிக்கா விடுத்த பயண எச்சரிக்கையை நீக்கவேண்டும் என்றும் என்றும் அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.