பருத்தித்துறை கற்கோவளத்தில் கணவனும் மனைவியும் கொல்லப்பட்ட
சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்கோவளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியர் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
தொழில் போட்டி காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்தக் கொலை தொடர்பில் மூவர் கைது
செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்க்காக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலைமையிலான விசேட பிரிவுகளும், மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையிலான அணிகளும் தீவிரமாக செயல்பட்டிருந்தன.