வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
மட்டக்களப்பு – கரடியனாறு காயான்குடாவில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில், சத்துருகொண்டானை சேர்ந்த கணபதிப்பிள்ளை
தர்மலிங்கம் (வயது 58) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.