தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுகிறது தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்!

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுகிறது தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்!

editor 2

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று மாலை 4.30 முதல் அனைத்து பயணச்சீட்டு வழங்கல் கடமைகளிலிருந்தும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விலகியிருந்தது.

தொடருந்து நிலைய அதிபர் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று எச்சரித்திருந்தது.

எவ்வாறாயினும்இ தங்களது கோரிக்கைகள் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்காமையினால் அனைத்து பயணச்சீட்டு வழங்கல் கடமைகளிலிருந்தும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விலகியிருந்தது.

எனினும் இன்று (30) நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Share This Article