அறுகம்குடா தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னணியில் வெளிநாடு – சண்டே ரைம்ஸ்!

அறுகம்குடா தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னஅறுகம்குடா தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னணியில் வெளிநாடு - சண்டே ரைம்ஸ்!ணியில் வெளிநாடு - சண்டே ரைம்ஸ்!

editor 2

வெளிநாடொன்றின் ஆதரவுடனேயே அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ள ‘சண்டே ரைம்ஸ்’ ஒக்ரோபர் 19 முதல் 24 ஆம் திகதிக்குள் இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில்,

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களின் வழிபாட்டு தலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

ஒக்ரோபர் 19 முதல் 24ஆம் திகதி இந்த தாக்குதலுக்குத்திட்டமிட்டிருந்தனர். இந்த
வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு நடைபெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன.

வெளிநாடொன்று இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்ற என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்பட்டது.

காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அறுகம்குடா தாக்குதல் திட்டத்தின் நோக்கம். அத்துடன், அறுகம் குடா அருகே பொத்துவில் நகரத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் நடந்திருந்தால் அவர்கள் மீதே பழி விழுந்திருக்கும். இதனால், உண்மையான குற்றவாளிகள் மீது கவனம் திரும்பியிருக்காது – சிறிது காலத்துக்காகவாவது இந்த தாக்குதல் சதித்திட்டம் தொடர்பில் கொழும்பு
புறநகரை சேர்ந்த ஒருவரும் வடக்கை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மாலைதீவு – இலங்கை பெற்றோருக்கு பிறந்த ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article