தமது அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் வேதனத்தை தற்போதைய அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி அரசியல் மேடையில் இணையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அந்த காலத்தில் தேங்காய்க்கு வரிசையில் எவரும் நிற்கவில்லை தற்போது நிற்கின்றனர்.
தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்குப் பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் .
நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் எனக்காக வாக்களியுங்கள் என மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை அதனால் நான் தோல்வியடைந்தேன்.
ஆனால் எங்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை 51 வீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை.
ஆகவே அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்மையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.