தமிழ்த் தலைவர்கள் அநுரவுடன் ஒளிப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும்’, இவ்வாறு கூறியுள்ளார் அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் எம்.பியுமான பிமல் ரத்நாயக்க.
புதுக்குடியிருப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் பதிந்து கொண்டு வருகின்றபடியால் பல
கட்சிகள் அவதூறுகளை பரப்பிக்கொண்டு வருகின்றார்கள். சுமந்திரன்,
டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அநுரவை சந்தித்து வருகிறார்கள்.
அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள் என்பதனை உணரமுடியும். அநுரவோடு படம் எடுத்த 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருப்பார்கள். அமைச்சரவை கொடுப்பதாயின் படம் எடுத்த அனைவருக்குமே கொடுக்க வேண்டும் – என்றார்.