முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார். பொருட்களின் விலைகளைக் குறைத்து
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறினார்.
மக்கள் மீது பாரிய வரி சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சிக்கு வந்ததும் அதனைக் குறைப்பதாகவும் குறிப்பிட்டார். ஆயினும் இவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உண்மையில் ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்திய திட்டங்களையே தற்போதைய ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்கிறார்.
அதேபோன்று உள்நாட்டில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவற்றை மீள கொண்டுவருவது மாத்திரமல்லாது திருடர்களை கைதுசெய்வதாகவும் கூறினார்.
இவையெல்லாம் ஆட்சியமைப்பதற்காக கூறப்பட்ட போலியான வாக்குறுதிகளாகும். இவற்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்-என்றார்.