2011 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனதாகக் கூறப்படும் வழக்கில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமாக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை வழங்கியிருந்தது.
இதனைச் சவாலுக்கு உட்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்றைய தினம் (22) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தமது சேவைபெறுநரின் நிலைப்பாட்டை மன்றுக்கு அறியப்படுத்தியதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.