முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 163 பேர், 20 வாகனங்கள் உட்பட பல சலுகைகளை கோரினார். அவற்றை நிராகரித்துவிட்டேன் என ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 163 பேர், 20 வாகனங்கள், 16 சமையல்காரர்கள் உட்பட பல சலுகைகளை கோரியிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்று வாகனங்களே வழங்கப்படும்.
அரச நிதியை முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்.
ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளில் இரண்டு அம்புலன்ஸ்கள் எந்நேரமும் தயாரான நிலையில் உள்ளன இவற்றை தனிப்பட்ட
சொத்தாகப் பயன்படுத்தக்கூடாது – என்றும் அவர் கூறினார்.
மாத்தறையில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை தெரிவித்தார்.