யானை சின்னம் இல்லாத பொதுத் தேர்தல்!

யானை சின்னம் இல்லாத பொதுத் தேர்தல்!

editor 2

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் என்றும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம், 1947ஆம் ஆண்டு முதல் நடந்த அனைத்துப் பாராளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கிய யானை சின்னம்
இல்லாத முதலாவது பொதுத் தேர்தலாக இது அமையவுள்ளது.

சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் இந்தக் கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்கவே தலைமை தாங்குவார். ஆனால், அவர் தேர்த லில்
போட்டியிட மாட்டார். 1977ஆம் ஆண்டின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க
பங்கேற்காத பொதுத் தேர்தலும் இதுவாகும்.

புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் களமிறங்கும் இந்தக் கூட்டணியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த
தரப்பினர் களமிறங்குவர்.

நேற்று ரணில் விக்கிரமசிங்கவின் பணிமனையில் நடந்த கூட்டத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று தெரிய வருகின்றன.

இதேநேரம், இலங்கை தொழிலாளர் கட்சியும் சேவல் சின்னத்துக்கு பதிலாக
சிலிண்டர் சின்னத்திலேயே களமிறங்கும் என்று அறிய வருகின்றது.

Share This Article