சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு குறித்த அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு குறித்த அறிவிப்பு!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், அடுத்த சாதாரண தர பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கே உத்தேசித்துள்ளோம். பரீட்சைக்கான உரிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

2026 ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகள் தாமதமடைவதை குறைத்து உரிய நேர அட்டைவணைக்கு முன்னெடுக்கப்படும்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணையாளர் நாயகம் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை காலை முதல் பரீட்சை பெறுபேறு சான்றிதல்கள் வழங்கப்படும்.

இணையவழி மூலம், ஒரு நாள் சேவைகள் அல்லது வழக்கமான சேவைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெறுபேறு சான்றிதல்கள் பெறலாம்.

ஒக்டோபர் மாதம் ஆம் திகதிக்குப் பின்னர் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் பெறுபேறுகளில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீள்பரிசீலனை செயல்முறையை விரைவாக முடித்து பெறுபேறுகளை விரைவாக வழங்குவதை திணைக்களம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share This Article