சீ.வி.வி தலைமையிலான அணி தனித்து போட்டி!

சீ.வி.வி தலைமையிலான அணி தனித்து போட்டி!

editor 2
C.V. Wigneswaran, Chief Minister of the Northern Provincial Council in Sri Lanka, addresses members of the Tamil community in Markham, Ontario, Canada, on January 15, 2017. During his trip to formalize a friendship agreement between the City of Markham and district of Mullaitivu, Northern Province in Sri Lanka Chief Minister C.V. Wigneswaran (C.V. Vigneswaran) spoke about the importance of issues of transitional justice and post-war development to diaspora Tamils in Canada. (Photo by Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இம்முறை பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடன் இணைந்து சங்கு சின்னத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியது.

இந்தநிலையில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் உள்ளடங்கி இருந்த கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதே கூட்டணியாகப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்து அண்மையில் அறிவித்தது.

எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தமது கட்சி ஏகமானதாகத் தீர்மானித்திருப்பதாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Share This Article