வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் உட்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவி விலகியுள்ள நிலையில் புதிய ஆளுநர்கள் பதவி ஏற்றுவருகின்றனர்.
இந்நிலையில்,
வடக்கு ஆளுநராக முன்னாள் மாவட்டச் செயலர் வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அவரை செய்தியாளர் ஒருவர் தொடர்புகொண்டு கேட்டபோது, அது சம்மந்தமாக தன்னிடம் உரையாடப்பட்டதாகவும் தான் கொழும்பிற்கு அழைக்கப்பட்ட நிலையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.