அரசாங்கத்தின் அமெரிக்காவுடனான பேச்சுத் தொடர்பில் ரணில் சந்தேகம்!

அரசாங்கத்தின் அமெரிக்காவுடனான பேச்சுத் தொடர்பில் ரணில் சந்தேகம்!

editor 2

தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் தொடர்பில் அரசாங்கம் தவறான தகவல்களை மக்களுக்குக் கூறுகிறதா என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் கண்டியில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அவர், ‘ பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான தனது நிலைப்பாட்டைமாற்ற அமெரிக் காவை சமாதானப்படுத்துவதில் வெற்றி பெற்றதாக அரசாங்கம் கூறுகிறது.

இது எப்படி முடியும்? சீனா மற்றும் பெரிய நாடுகளுடனான தனது பேச்சுகளை அமெரிக்கா இன்னமும் முடிக்கவில்லை. ஆரம்பத்தில் பெரிய நாடுகளில் கவனம் செலுத்தும் பின்னர்தான், அவர்கள் சிறியநாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவார்கள்’, என்று கூறினார்.

Share This Article