அரசாங்கத்துக்கு தனி மனித பாதுகாப்பையேனும் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக நாமல் குற்றச்சாட்டு!

அரசாங்கத்துக்கு தனி மனித பாதுகாப்பையேனும் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக நாமல் குற்றச்சாட்டு!

editor 2

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிக்கவுள்ளதாக தெரிவித்து ஆட்சியமைத்த அரசாங்கத்துக்கு தனி மனித பாதுகாப்பையேனும் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வெலிமடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே தங்களது உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதேவேளை இந்தியாவுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து தகவல்கள் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். 

எனினும் இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த முடியாதென அரசாங்கம் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். 

குறைந்தபட்சம் அரசாங்கத்தில் உள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அறிவிக்கப்படாமல் இந்தியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article