தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

Editor 1

ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளின் போது தேர்தல் உத்தியோகத்தர்களால் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

சில உத்தியோகத்தர்கள் விரும்புவாக்குகளை எண்ணவேண்டிய அவசியம் வராது என நினைத்து முன்கூட்டியே வீடுகளி;ற்கு சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்கரணவக்க இரண்டாவது விருப்புவாக்குகளை எண்ணவேண்டிய தேவையேற்பட்டவேளை அதிகாரிகள் அவர்களை வீடுகளில் இருந்து அழைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் சில இடங்களில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்பட்டது,42 வீத வாக்குகளை பெற்றமைக்காக தேசிய மக்கள் சக்தியை பாராட்டியுள்ளதுடன் 58 வீதமான வாக்காளர்கள் அவர்களிற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த விதிமுறை மீறல்கள் குறித்து விசாரணைகளை தனது கட்சி கோரலாம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share This Article