ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான போதிய வாக்கு இன்மையால் 2 ஆவது விருப்பு வாக்கினை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ள நிலையில் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகவே விருப்பு வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
அதற்கமைய இரண்டாவது விருப்புவாக்கு எண்ணப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட ஏனையவர்கள் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி
அனுரகுமார திஸாநாயக்க – 2,707,105 (39.52%)
சஜித் பிரேமதாஸ – 2,348,052 (34.28%)
ரணில் விக்கிரமசிங்க – 1,192,649 (17.41%)
அரியநேத்திரன் – 210,622