கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு 06.00 மணி முதல் பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கும் சென்றுள்ளனர்.
இத்தேகந்தவின் சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று டுபாய் சென்றுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் அவர்கள் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.