அம்பாறையில் விபத்து! சிறுமி மரணம்!

அம்பாறையில் விபத்து! சிறுமி மரணம்!

editor 2

அம்பாறை – காரைத்தீவு வீதியில் மாவடிப்பள்ளி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறையில் இருந்து காரைத்தீவு சந்தி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் அவரது மகளும் படுகாயமடைந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை 10, சாலி வீதியில் வசித்து வந்த 14 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

Share This Article