2 சொகுசுவீடுகளை பயன்படுத்த கெஹலியவின் மகனுக்குத் தடை!

2 சொகுசுவீடுகளை பயன்படுத்த கெஹலியவின் மகனுக்குத் தடை!

editor 2

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான 2 சொகுசு வீடுகளைப் பயன்படுத்தத் தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியில் 2 வீடுகளை தலா 80 மில்லியன் ரூபா வீதம், 65 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி சொத்துக்குவிப்பு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இந்த கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, டிசம்பர் 19ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட சொத்துக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Share This Article