அறகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்கி இருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷ்போல் மாறி இருக்கும் – என்று பொதுஜன பெரமுன கட்சி
யின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
நல்லாட்சியின்போது அரசுடன் இணைந்து செயற்பட்டவர்களும் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். (தேசிய மக்கள் சக்தி) அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் நிச்சயம் வாக்களிக்கமாட்டார்கள். கள்வர்களை பிடிப்போம் எனக் கூறியே நல்லாட்சியின்போது வந்தனர்.
தற்போதும் அதே கோஷத்துடன் வந்துள்ளனர். நாட்டில் அறகலய ஏற்பட்டது.
மக்களின் பிரச்சனையைவிட சூழ்ச்சிக்காரர்கள் முந்திக்கொண்டனர்.
அன்று நாம் ஓர் அடி பின்வாங்கி இருக்காவிட்டில் இந்நாடு பங்களாதேஷ் போல் ஆகி இருக்கக்கூடும். போருக்கு கட்டளையிட்ட நானோ அல்லது கோட்டாபய ராஜபக்ஷவோ மக்கள் மீது ஒரு தோட்டாவைக்கூட பயன்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை – என்றார்.