யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் நேற்று நடைபெறவிருந்த மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த
ரயில் பயணம் இரத்து செய்யப்பட்டது.
இதனால், யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை ஆரம்பமாவது மேலும் தாமதமாகும் என்று தெரிய வருகிறது.
மாஹோ முதல் அநுராதபுரம் வரையான ரயில் பாதை திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த ஜனவரி 7ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த ரயில் சேவை கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்றைய தினம் மாஹோவிலிருந்து அநுராதபுரம் வரை
பரீட்சார்த்த ரயில் ஓட்டம் நடைபெறவிருந்தது.
ஆனால், சுரங்கப் பாதை மற்றும் 6 ரயில் நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையவில்லை என்பதாலும் சமிக்ஞை விளக்கு அமைப்பை நிறுவும் பணி முழுமைய டையவில்லை என்பதாலும் பரீட்சார்த்த ரயில் ஓட்டம் நிறுத்தப்பட்டது என்றும் தெரிய வருகின்றது.