ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. எனவே, தகுதி பெற்றவர்கள் வாக்களிக்க
இன்றே கடைசி சந்தர்ப்பம் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 4, 5, 6ஆம் திகதிகளில் நடைபெற்றது.
அன்றைய தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றைய தினமும் வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு இனி சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்று தேர்தல்கள்
ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் மாவட்ட செயலகங்கள் அல்லது தமது பணியிடங்களுடன் தொடர்புடைய பிரதேச செயலகத்துக்கோ சென்று தமது வாக்கை செலுத்தமுடியும்.
எதிர்வரும், 21ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 321 அரச பணியாளர்கள் தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது